Saturday, 18 May 2013

Kathal Varama Sabama


கண் மை கொண்டு வரையும் ஓவியமோ. . !

எக்காலமும் தொடரும் காவியமோ. . !

பெண்மை கொண்ட மோகனமோ. . !

இங்கு பேசும் மொழிகள் மௌனங்களோ. . !

வெண்மை கொண்ட உள்ளங்களோ. . !

அவை வேண்டி இங்கு சேர்ந்தனவோ. . !

தன்மை இங்கு அழிந்திடுமோ. . !

அதில் தாயன்பு கொஞ்சம் தோன்றிடுமோ. . !

திண்மை கொஞ்சம் கரைந்திடுமோ. . !

அவள் தீண்டினால் முழுதும் வீழ்ந்திடுமோ. . !

அவள் அண்மை கண்டு நெருங்கிடுமோ. . !

அதில் ஆண்மை ஆனந்தம் கண்டிடுமோ. . !

மண்மேல் தோன்றிடும் உயிரிடமோ. . !

மாறாத காதல் என்பது இதானோ. . !

காதல் என்பது வரமோ. . !

இல்லை கடவுள் தந்த கடும் சாபமோ. . ! ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment