Saturday, 18 May 2013

Azhana Kavithai

கம்பன் சிந்தையில் தவறியதும்

எந்த கவிஞர்

கைக்குள் எட்டாததுமான 

கவியோன்று 

புனைய அவள் சொன்னாள்

என்னிடம். . !

கற்பனையை புரட்டினேன். . !

மதி முகம் மல்லிகை வாசம். . !

மான் விழி. . ! 

தேன் மொழி என்றேன். . !

செல்லாது செல்லாது என்றாள். . !

மரகதத்தால் இழைத்த 

மாணிக்க வீணை மதியை வென்ற

மன்மதன் தேனீ

எவரும் மீட்டாத எனக்கான வீணை. . !

என்றேன் சிரித்தாள். . !

சிதறியது சிந்தை கண்ணால் 

கேலி செய்தாள். . !

ஒரு நிமிடம் யோசித்தேன். . !

இரு வரியில்

ஒரு வரிக்கவிதை எழுதினேன். . !

ஏதுவும் சொல்லவில்லை. . !

அவள்

மௌனமானாள். . !

ஆனால்

அவள் அழகுக்கண்கள் சொல்லியது

இதுவும்

அழகான கவிதை என்று. . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments:

Post a Comment